சீனாவில் நிலச்சரிவில் சிக்கி 21 பேர் பலி! பலர் மாயம்
.jpg)
14 ஆவணி 2023 திங்கள் 08:42 | பார்வைகள் : 10035
சீனாவில் ஷான்சி மாகாணத்தின் சியான் பகுதியில் பெய்த கனமழையால் கடும் வெள்ளம் ஏற்பட்டது.
இதனால் பல பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
மேலும், நிலச்சரிவில் சிக்கி பலர் பலியாகினர்.
வெள்ளிக்கிழமை கனமழை பெய்த நிலையில் பலி எண்ணிக்கை 21 ஆக உயர்ந்தது.
அத்துடன் 6 பேர் மாயமாகியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மீட்புபணியில் துரிதகதியில் ஈடுபட்டு வரும் மீட்புப்படையினர், மாயமானவர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், கிராமத்தில் உள்ள 2 வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாகவும், அருகில் உள்ள பாலங்கள், சாலைகள், மின்விநியோகங்கள் மற்றும் உள்கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதற்கிடையில், ஆயுதமேந்திய பொலிஸ் படை 100க்கும் மேற்பட்ட பணியாளர்களை பாதிக்கப்பட்ட பகுதிக்கு அனுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.
அத்துடன் மீட்புப்பணியை ஒருங்கிணைக்கும் முயற்சியில் தீயணைப்பு துறை, காவல்துறை மற்றும் அவசரகால மேலாண்மை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1