ஐசிசி தரவரிசையில் இலங்கை அணியின் இளம் வீரர்!

12 சித்திரை 2024 வெள்ளி 09:45 | பார்வைகள் : 6578
இலங்கை கிரிக்கெட் அணி வீரர் கமிந்து மெண்டிஸ், ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் பாரிய அளவில் முன்னேறியுள்ளது.
வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரை இலங்கை அணி 2-0 என முழுவதுமாக கைப்பற்றியது.
இந்தத் தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கமிந்து மெண்டிஸ் (Kamindu Mendis) தொடர் நாயகன் விருதைப் பெற்றார்.
அவர் இரண்டு போட்டிகளிலும் சேர்த்து 367 ஓட்டங்கள் குவித்திருந்தார். இதன்மூலம் கமிந்து மெண்டிஸ் டெஸ்ட் தரவரிசையில் 18 இடங்கள் முன்னேறி 47வது இடத்தைப் பிடித்துள்ளார்.
அதிலும் குறிப்பாக 63 டெஸ்ட்கள் விளையாடிய அனுபவம் வாய்ந்த குசால் மெண்டிஸை (52வது இடம்), 3வது டெஸ்டிலே முந்தியுள்ளார் கமிந்து மெண்டிஸ்.
மேலும், அனுபவ வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் இரண்டு முன்னேறி 25வது இடத்தைப் பிடித்துள்ளார்.