இஸ்ரேலுக்கு பொருட்களை ஏற்றுமதி செய்ய கட்டுப்பாடு விதித்த துருக்கி
 
                    12 சித்திரை 2024 வெள்ளி 09:07 | பார்வைகள் : 8659
காசாவில் போர்நிறுத்தம் அறிவிக்கப்படும் வரை 54 வகையான பொருட்களை இஸ்ரேலுக்கு ஏற்றுமதி செய்வதற்கு துருக்கி கட்டுப்பாடுகளை விதிக்கும் என துருக்கி வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கைகள் உடனடியாக அமலுக்கு வரும் என்று கூறிய அமைச்சகம், கட்டுப்பாடுகளில் இரும்பு மற்றும் எஃகு பொருட்கள் மற்றும் கட்டுமான உபகரணங்கள் உள்ளிட்டவை அடங்கும் என்று அறிவித்துள்ளது.
“இஸ்ரேல் உடனடியாக போர்நிறுத்தத்தை அறிவிக்கும் வரை மற்றும் காசாவிற்கு போதுமான மற்றும் தடையின்றி மனிதாபிமான உதவிகளை அனுமதிக்கும் வரை இந்த முடிவு நடைமுறையில் இருக்கும்” என்று அமைச்சகம் சமூக ஊடகங்களில் அறிவித்தது
 வாங்க - விற்க | வேலை
வாங்க - விற்க | வேலை  நாணய மாற்று
நாணய மாற்று






 பொதிகள் அனுப்பும் சேவை
        பொதிகள் அனுப்பும் சேவை         
     


 
        
         
        
         
        
         
        
        
















 Bons Plans
Bons Plans Annuaire
Annuaire Scan
Scan