Paristamil Navigation Paristamil advert login

கட்டுநாயக்க விமான நிலையத்தில் மூவர் கைது!

கட்டுநாயக்க விமான நிலையத்தில்  மூவர் கைது!

11 சித்திரை 2024 வியாழன் 16:50 | பார்வைகள் : 13631


இந்தியா மற்றும் டுபாயை சேர்ந்த மூன்று பயணிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று  கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுங்கவரி செலுத்தாமல், சுங்கத்திற்கு அறிவிக்காமல் பொருட்கள் சிலவற்னை கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் இருவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலைய குற்றப்புலனாய்வு திணைக்கள   அதிகாரிகளினால் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது, 111 வெளிநாட்டு மதுபான போத்தல்கள்,  சிகரெட்டு தொகையொன்றும் மற்றும் கணினி உபரி பாகங்கள் சிலவும் கண்டுபிடிக்கப்பட்டன.

சந்தேகநபர்கள் கொழும்பு 13 மற்றும் மஸ்கெலியா பிரதேசங்களை வசிப்பிடமாகக் கொண்ட இலங்கையர்கள் என தெரியவந்துள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்