Paristamil Navigation Paristamil advert login

இஸ்ரோவின் அடுத்த வெற்றி பயணம்; நிலவில் தரையிறங்கவுள்ள சந்திரயான்-4

இஸ்ரோவின் அடுத்த வெற்றி பயணம்; நிலவில் தரையிறங்கவுள்ள சந்திரயான்-4

11 சித்திரை 2024 வியாழன் 10:59 | பார்வைகள் : 5484


இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ (ISRO) நிலவின் தென் துருவத்தில் சந்திரயான்-4ஐ தரையிறக்குவதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் (S. Somnath) தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு இஸ்ரோவின் முயற்சியால் சந்திரயான்-3 (Chandrayaan-3) நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்ட சாதனை படைத்தது.

அதையடுத்து சந்திரயான்-4 தயாராகி வருவதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் (S. Somnath) தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தெரிவிக்கையில், நிலவின் தென் துருவத்தில் சந்திரயான்-4 தரையிறக்கப்பட்டு, அங்கிருந்து சில மாதிரிகளை பூமிக்கு கொண்டு வரும் எனவும் இந்த திட்டம் வெற்றிப்பெற்றால் சந்திரனின் மேற்பரப்பில் இருந்து மாதிரிகளை கொண்டு வரும் நான்காவது நாடாக இந்தியா (India) அழைக்கப்படும் என கூறியுள்ளார்.

“சந்திரயானின் முதல் பாகமான புரொபஷனல் ராக்கெட்டில் இருந்து விண்கலம் பிரிந்து சென்றவுடன், அது சந்திரனை நோக்கி பயணிக்க உதவும்.

அடுத்த கட்டமான டிசென்டர் நிலவில் தரை இறங்குவதற்காக உதவும். பின்னர் அதிலிருந்து வெளியே வரும் ரோவர் நிலவின் மேற்பரப்பில் உள்ள மாதிரிகளை சேமித்து, பூமிக்கு அனுப்பும் என கூறியுள்ளார்.

மேலும் சந்திரயான்-4 (Chandrayaan-4) தற்போது தயார் செய்யப்பட்டு வருகிறது.

பிரதமர் நரேந்திர மோடியின் அறிவுறுத்தலுக்கமைய, சந்திரயான் 4 திட்டம் 2040 ஆம் ஆண்டின் முற்பகுதியில் தென் துருவத்தில் தரையிறக்கப்படும் எனவும் இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

6 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

சதீஸ்குமார் அபிசன்

வயது : 21

இறப்பு : 07 Dec 2025

  • Ecology

    2

வர்த்தக‌ விளம்பரங்கள்