ஹாங்காங்கில் கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து - ஐவர் பலி
11 சித்திரை 2024 வியாழன் 10:10 | பார்வைகள் : 6359
ஹாங்காங்கில் உள்ள கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 5 பேர் உயிரிழந்துள்ளதுடன், 11 பேர் காயமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தீ விபத்தானது (2024.04.10) இடம்பெற்றதாக செய்தி வெளியாகியுள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு பிரிவினர், கட்டடத்தில் இருந்தவர்களை மீட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.
முதல் தளத்தில் உள்ள உடற்பயிற்சி கூடத்தில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.
தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


























Bons Plans
Annuaire
Scan