▶ கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் பலி - ஒருவர் படுகாயம்! - தாக்குதலாளி சுட்டுக்கொலை!

11 சித்திரை 2024 வியாழன் 05:36 | பார்வைகள் : 15504
நேற்று ஏப்ரல் 10 ஆம் திகதி வியாழக்கிழமை மாலை பிரான்சின் தென்மேற்கு நகரமான Bordeaux இல் தாக்குதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. நபர் ஒருவர் மேற்கொண்ட கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன், மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார்.
Garonne ஆற்றங்கரையருகே மாலை 7.30 மணி அளவில் நடந்து சென்ற இருவர் மீது ஆயுததாரி ஒருவர் தாக்குதல் மேற்கொண்டுள்ளார். இறைச்சி வெட்டும் கூரான கத்தி ஒன்றினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில், ஒருவர் பலியாகியுள்ளார். மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
தாக்குதலாளி சம்பவ இடத்தில் இருந்து ஆயுதத்துடன் தப்பிச் செல்ல முற்பட்டவேளையில், காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
தாக்குதலாளியின் நோக்கம் குறித்து அறிய முடியவில்லை. ஆனால் முதல்கட்ட தகவல்களிலேயே இது பயங்கரவாத தாக்குதல் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் இரு வேறு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025