வெளிநாடு செல்ல முயற்சித்த யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் கட்டுநாயக்கவில் கைது
10 சித்திரை 2024 புதன் 16:54 | பார்வைகள் : 7482
போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி மலேசியா செல்ல முற்பட்ட இளைஞர் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் - சண்டிலிப்பாய் பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய அவர் இன்று காலை மலேசியாவின் கோலாலம்பூர் நோக்கி பயணிக்கவிருந்தார்.
பயண அனுமதிக்கான பணியை நிறைவு செய்து பயணிகள் முனையத்தில் அமர்ந்திருந்த நிலையில், சந்தேகத்தின் அடிப்படையில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் அவரை சோதனைக்கு உட்படுத்தப்படுத்தியுள்ளனர்.
அவர் தமது தனிப்பட்ட தகவல்களை மாற்றி போலி கடவுச்சீட்டை தயார் செய்துள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சந்தேகநபர் நாட்டில் இருந்து வெளியேறுவதற்கு ஏற்கனவே நீதிமன்றம் தடை விதித்துள்ளமையும் இதன்போது கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த 2012ஆம் ஆண்டு படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு தப்பிச் செல்ல முற்பட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட குறித்த நபர், நாட்டில் இருந்து வெளியேறுவதற்கு நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றம் முன்னர் தடை உத்தரவு பிறப்பித்திருந்தது.
இவ்வாறான பின்னணியிலேயே அவர் போலிக் கடவுச்சீட்டை தயாரித்து வெளிநாடு செல்ல முற்பட்டிருந்தார்.
இந்நிலையிலேயே, அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan