Paristamil Navigation Paristamil advert login

பொண்டாட்டிக்கு ஒரே தலைசுத்தல்

பொண்டாட்டிக்கு ஒரே தலைசுத்தல்

10 சித்திரை 2024 புதன் 11:32 | பார்வைகள் : 1919


ஆண்: டாக்டர் எம் பொண்டாட்டிக்கு ஒரே தலைசுத்தல்...
டாக்டர்: வாந்தியும் ஒமட்டலும் இருக்கா...!?
ஆண்: ஆமா டாக்டர்...
டாக்டர்: இது ரெண்டு வாரமா இருக்கா...?
ஆண்: ஆமா டாக்டர்...!
டாக்டர்: குறிப்பா ஈவினிங்ல இந்த சிம்டம்ஸ் இருக்கா...?
ஆண்: ஐய்யோ டாக்டர் அப்படியே சொல்றீங்களே...!
டாக்டர்: சமயத்தில உங்களுக்கும் வாமிட்டிங் ஃபீல் இருக்குமே...!
ஆண்: நேர்ல பாத்த மாதிரியே சொல்றீங்களே டாக்டர்...! ஒரு தடவ நானே வாந்தி எடுத்துட்டேன்...
டாக்டர்: அக்கம் பக்கத்திலயும் இந்த வியாதி இருக்குமே...
ஆண்: டாக்டர் நீங்க டாக்டர் இல்ல தெய்வம்... எப்படி டாக்டர்...?
டாக்டர்: தெய்வம்னு சொல்லாதப்பா.... இந்த சிம்டம்ஸ் எங்க வீட்லயும் இருக்குப்பா...
ஆண்: ஐய்யய்யோ... இருக்க மருந்தே இல்லையா டாக்டர்...
டாக்டர்: மருந்து இல்லப்பா... ஆனாலும் குணப்படுத்தலாம்...
ஆண்: எப்படி டாக்டர்...!?
டாக்டர்: கொஞ்ச நாளைக்கு பாண்டியன் ஸ்டோர் பாக்காம இருந்தா போதும் வியாதி தானா சரியாயிடும்...

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்