மைக்கேல் ஜாக்சன் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் தென்னிந்திய நடிகரா?
10 சித்திரை 2024 புதன் 09:51 | பார்வைகள் : 2294
உலக புகழ்பெற்ற பாடகர் மற்றும் நடன கலைஞர் மைக்கல் ஜாக்சன் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை உருவாக்க பிரபல இயக்குனர் திட்டமிட்டுள்ள நிலையில் இதில் மைக்கேல் ஜாக்சன் கேரக்டரில் தென்னிந்திய பிரபல நடிகர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
அமெரிக்காவின் பிரபல பாடகர் மற்றும் நடன கலைஞர் மைக்கேல் ஜாக்சன் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை எடுக்க உலகில் பலர் முயற்சி செய்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது இந்தியாவில் இது குறித்த முயற்சி நடைபெற உள்ளதாக தெரிகிறது.
சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றாலும் திரை உலகினர் உட்பட பலரும் கழிவு கழுவி ஊற்றிய ‘அனிமல்’ படத்தை இயக்கிய இயக்குனர் சந்தீப் ரெட்டி தான் இந்த படத்தை இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் மைக்கேல் ஜாக்சன் கேரக்டரில் அல்லு அர்ஜுன் நடிக்க இருப்பதாக கூறப்படும் நிலையில் இந்த செய்தி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
தற்போது அல்லு அர்ஜுன் ’புஷ்பா 2’ படத்தில் நடித்து கொண்டிருக்கும் நிலையில் அடுத்ததாக அவர் அட்லீ இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க போகிறார் என்றும் இந்த இரண்டு படங்களையும் முடித்துவிட்டு அவர் மைக்கேல் ஜாக்சன் திரைப்படத்தில் இயக்குனர் சந்தீப் ரெட்டியுடன் இணைவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படும் நிலையில் இந்த படம் உறுதி செய்யப்பட்டால் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பெரும் வரவேற்பு பெரும் என்று கூறப்படுகிறது.