சாதித்து காட்டிய 14 வயது இலங்கை வீராங்கனை! மரண அடி வாங்கிய இங்கிலாந்து

10 சித்திரை 2024 புதன் 09:23 | பார்வைகள் : 5031
U19 மகளிர் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 108 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது.
காலேவில் 19 வயதிற்குட்பட்ட மகளிர் இங்கிலாந்து, இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டி நடந்தது.
இப்போட்டியில் முதலில் துடுப்பாடிய இலங்கை அணி 226 ஓட்டங்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. அதிகபட்சமாக ரஷ்மிகா செவ்வந்தி 59 ஓட்டங்களும், சஞ்சனா கவிந்து 27 ஓட்டங்களும் எடுத்தனர்.
அதனைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. குறிப்பாக, 14 வயது சுழற்பந்து வீச்சாளரான சாமொடி முனசிங்கே மிரட்டலான பந்துவீச்சினால் எதிரணியை அடிபணிய வைத்தார்.
அதேபோல் தேவ்மி விஹன்காவும் சிறப்பாக பந்துவீச, இங்கிலாந்து அணி 118 ஓட்டங்களுக்கு சுருண்டது.
இதன்மூலம் இலங்கை 108 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. சாமொடி முனசிங்கே 5 விக்கெட்டுகளும், தேவ்மி விஹன்கா 4 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025