இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் சூளுரைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அமெரிக்கா!

10 சித்திரை 2024 புதன் 08:13 | பார்வைகள் : 7988
ஹமாஸ் பயங்கரவாத அமைப்பை அடியோடு ஒழிப்பதாக இஸ்ரேல் சூளுரைத்து காசா மீது போரை தொடங்கி கடந்த 6 மாதங்களாக தாக்குதலை மேற்கொண்டு வருகின்றது.
இவ்வாறான நிலையில் ரபா நகரை ஹமாஸ் அமைப்பின் கடைசி கோட்டையாக கருதும் இஸ்ரேல் அங்கு தனது தரைப்படையை அனுப்பி அந்த நகரை ஆக்கிரமிக்க தீவிர முனைப்பு காட்டி வருகிறது.
காசாவின் ரபா நகருக்குள் தரைப்படையை அனுப்பி அந்த நகரை ஆக்கிரமிப்பது உறுதி என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு சூளுரைத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் கூறுகையில்
"ஹமாஸ் உடனான போரில் வெற்றிப்பெறுவதற்கு ரபா நகரை கட்டுப்பாட்டில் எடுப்பது அவசியம். அது நடக்கும், அதற்கான ஒரு நாள் உள்ளது" என கூறியுள்ளார்.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் இந்த பேச்சுக்கு அமெரிக்கா தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளது.
ரபாவுக்கு தரைப்படையை அனுப்புவது மிகப்பெரிய தவறு என்றும், அங்குள்ள பொதுமக்களை பாதுகாப்பதற்கான நம்பகமான திட்டத்தை உருவாக்க வேண்டியது அவசியம் எனவும் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025