வரலாறு படைத்த மும்பை இந்தியன்ஸ் - டி20 போட்டிகளில் 150வது வெற்றி

9 சித்திரை 2024 செவ்வாய் 08:54 | பார்வைகள் : 6031
150 டி20 போட்டிகளில் வெற்றி பெற்ற முதல் அணியாக மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians) வரலாறு படைத்துள்ளது.
டி20 போட்டிகளில் வேறு எந்த எந்த அணியும் இத்தனை முறை வெற்றி பெற்றதில்லை.
மும்பை வான்கடே மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி, இந்த கவுரவத்தை எடுத்துக்கொண்டது.
இதுவரை மும்பை இந்தியன்ஸ் அணி IPL மற்றும் Champions League T20 போட்டிகளில் 273 போட்டிகளில் விளையாடியுள்ளது.
அதில், அந்த அணி 150 போட்டிகளில் வெற்றியும், 117 போட்டிகளில் தோல்வியும் அடைந்துள்ளது.
இரண்டு போட்டிகளுக்கு முடிவுகள் எதுவும் இல்லை. சூப்பர் ஓவருக்குச் சென்ற ஆட்டங்களில் மும்பை அணி இரண்டில் வெற்றியும், மற்ற இரண்டில் தோல்வியும் கண்டது.
இந்தப் பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரண்டாவது இடத்தில் உள்ளது. CSK அணி இதுவரை 148 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
சிஎஸ்கே டி20யில் 253 போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில் 148 வெற்றி, 101 தோல்வி. இரண்டு போட்டிகளிலும் முடிவுகள் எதுவும் இல்லை.
சூப்பர் ஓவருக்குச் சென்ற இரண்டு போட்டிகளிலும் சென்னை அணி தோல்வியடைந்தது.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025