கடலில் விழுந்து விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர்...
7 பங்குனி 2024 வியாழன் 15:57 | பார்வைகள் : 10354
மெக்சிகோவில் பயிற்சியின் போது ஹெலிகாப்டர் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து கடலில் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் மூன்று கடற்படை வீரர்கள் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
மெக்சிகோ கடற்படை வீரர்கள் நேற்று, பாந்தர் ஹெலிகாப்டரில் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர்.
மெக்சிகோ வளைகுடாவில் நிறுத்தப்பட்டிருந்த போர்க்கப்பலில் இருந்து புறப்பட்டுச் சென்ற அந்த ஹெலிகாப்டர் சிறிது நேரத்தில் கட்டுப்பாட்டை இழந்து கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது.
இதையடுத்து கப்பலில் இருந்த மீட்புக்குழுவினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
ஹெலிகாப்டரில் 8 பேர் பயணித்தனர். இதில், 3 வீரர்கள் உயிரிழந்தனர். 3 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
2 பேரை காணவில்லை. அவர்களை தேடும் பணியில் மீட்புக்குழ iஈடுபட்டுள்ளனர்.
இந்த தகவலை மெக்சிகோ கடற்படை தெரிவித்துள்ளது.
விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்படுவதாகவும் கடற்படை கூறியுள்ளது.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
3






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Ajouter
Annuaire
Scan