கெஜ்ரிவால் மீது அமலாக்கத்துறை புதிய வழக்கு
6 பங்குனி 2024 புதன் 18:10 | பார்வைகள் : 7058
மதுபான கொள்கை வழக்கில் தொடர்ச்சியாக எட்டு சம்மன்களுக்கு பதில் அளிக்காத டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது அமலாக்கத்துறை கோர்ட்டில் புதிதாக வழக்குப்பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டில்லி ஆம் ஆத்மி அரசு கொண்டு வந்துள்ள புதிய மதுபான கொள்கையில் அரசுக்கு பல ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக வழக்கு பதிந்து விசாரணை நடத்த துணை நிலை கவர்னர் உத்தரவிட்டார்.
இது தொடர்பாக சி.பி.ஐ., அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இதில் நடந்த பண மோசடி தொடர்பான வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை எட்டு சம்மன்கள் அனுப்பியது. சம்மனை மதிக்காமல் கெஜ்ரிவால் டிமிக்கி கொடுத்து வருகிறார்.
இதையடுத்து சம்மன்களை மதிக்காத கெஜ்ரிவால் மீது கோர்ட்டில் அமலாக்கத்துறை புதிய வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளது. அதில் நேரில் அல்லது வீடியோ கான்பரன்சிங் வாயிலாக ஆஜராக கெஜ்ரிவாலுக்கு உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தது. வழக்கு பட்டியலிடப்பட்டு உள்ளதால் வரும் 16-ம் தேதி விசாரணைக்கு ஏற்கப்பட உள்ளது.


























Bons Plans
Annuaire
Scan