Paristamil Navigation Paristamil advert login

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல்  - நிக்கி ஹேலி விலகுகிறார்

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல்  - நிக்கி ஹேலி விலகுகிறார்

6 பங்குனி 2024 புதன் 15:57 | பார்வைகள் : 8488


அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான குடியரசுக் கட்சி வேட்பாளருக்கான போட்டியிலிருந்து நிக்கி ஹேலி விலகவுள்ளார் என உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 

இதனால், முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மாத்திரமே குடியரசுக் கட்சியின் எஞ்சியுள்ள ஒரேயொரு போட்டியாளர் ஆவார்.

தென் கரோலினா மாநில முன்னாள் ஆளுநரும் ஐநாவுக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதுவருமான நிக்கி ஹேலி, தனது தீர்மானத்தை தென் கரோலினா மாநிலத்தின் தலைநகர் சார்ள்ஸ்டனில் உள்ளூர் நேரப்படி இன்று புதன் காலை 10.00 மணிக்கு (இலங்கை, இந்திய நேரப்படி இரவு 8.30) அறிவிக்கவுள்ளார்.

இதுவரை நடைபெற்ற குடியரசுக் கட்சியின் உட்கட்சித் தேர்தல்களில் வொஷிங்டன் டி.சி மற்றும் வேர்மண்ட் மாநிலத்தில் மாத்திரமே நிக்கி ஹேலி வெற்றியீட்டிய நிலையில் அவர் இப்போட்டியிலிருந்து விலகுகிறார்.  

வர்த்தக‌ விளம்பரங்கள்