Paristamil Navigation Paristamil advert login

'என்ஜாய் என்சாமி' பாடல்ச சர்ச்சையில் ஏ.ஆர்.ரஹ்மான்?

'என்ஜாய் என்சாமி' பாடல்ச சர்ச்சையில் ஏ.ஆர்.ரஹ்மான்?

6 பங்குனி 2024 புதன் 11:34 | பார்வைகள் : 12338


‘என்ஜாய் என்சாமி’ பாடல் மூலம் தனக்கு ஒரு ரூபாய் கூட வருமானம் வரவில்லை என்று நேற்று இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் வீடியோ ஒன்றை வெளியிட்ட நிலையில் இந்த வீடியோவின் கமெண்ட்களில் ஏஆர் ரகுமான் குறித்து விமர்சனம் செய்யப்பட்டது.

சந்தோஷ் நாராயணன் குற்றஞ்சாட்டிய மியூசிக் நிறுவனத்தின் அம்பாஸிடர் ஏஆர் ரகுமான் என்பதால் தான் இணையத்தில் பலர் அவரை கடுமையாக விமர்சிக்க தொடங்கிய நிலையில் ஏஆர் ரகுமான் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு சந்தோஷ் நாராயணன் தனது சமூக வலைத்தளத்தில் பதில் அளித்துள்ளார்.

அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது ’அன்புக்குரிய ஏ ஆர் ரகுமான் அவர்கள் இந்த ஒட்டுமொத்த மாஜா பிரச்சனையில் எந்தவித எதிர்பார்ப்புகள் இல்லாமல் எனக்கு மிக ஆதரவாக இருந்தார். பல போலி வாக்குறுதிகள் மற்றும் தீய நோக்கங்கள் அவரையும் பலிகடா ஆக்கிவிட்டது, மிக்க நன்றி சார்’ என்று பதிவு செய்திருந்தார்.

மேலும் அறிவு, தீ , எஸ்விடிபி மற்றும் நான் என யாருக்குமே இந்த பாடலின் மூலம் வருமானம் கிடைக்கவில்லை, நாங்கள் வஞ்சிக்கப்பட்டுள்ளோம், இந்த நேரத்தில் சுயாதீன கலைஞர்களை ஆதரிக்கும் படி உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.

வரும் நாட்களில் பா ரஞ்சித் மற்றும் அறிவு ஆகியோர்களின் வழிகாட்டுதல் படி அவர்களுடன் இணைந்து பணியாற்றுவேன். அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். சுயாதீன கலைஞர்களுக்கு கட்டண நிலுவை உள்ள நிலையில் அவர்களுடைய தொகை விரைவில் வழங்கப்படும் என்பதை உறுதி செய்து கொள்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

6 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

சதீஸ்குமார் அபிசன்

வயது : 21

இறப்பு : 07 Dec 2025

  • Ecology

    2

வர்த்தக‌ விளம்பரங்கள்