இலங்கையில் வழக்கு விசாரணைக்காக சென்றவர்கள் மீது அசிட் வீச்சு

6 பங்குனி 2024 புதன் 11:00 | பார்வைகள் : 7096
வழக்கு விசாரணைக்காக வந்து கொண்டிருந்த போது மேற்கொள்ளப்பட்ட அசிட் வீச்சில் ஐவர் காயமடைந்துள்ளனர்.
இரத்தினபுரி மேல் நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் புதன்கிழமை (06) காலை இடம்பெற்ற அசிட் வீச்சினால் ஐவர் காயமடைந்து இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இரத்தினபுரி தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
வழக்கு ஒன்றுக்காக வந்த ஒருவர், வீதியில் பயணித்த அவரது மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் மீது அசிட் வீச்சு தாக்குதல் நடத்தியுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
இரத்தினபுரியின் புதிய நகரத்தில் 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23 ஆம் திகதி இடம்பெற்ற வாகன விபத்துடன் தொடர்புடைய பிரதான பிரதிவாதியை இலக்கு வைத்தே அசிட் வீச்சு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வழக்கு விசாரணைக்கு ஆஜராக வந்தபோது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கார் விபத்தில் உயிரிழந்த இளைஞனின் தந்தையே அசிட் வீச்சை மேற்கொண்டார் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார் என இரத்தினபுரி பொலிஸார் தெரிவித்தனர்.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1