ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்
6 பங்குனி 2024 புதன் 09:07 | பார்வைகள் : 7646
ஈரான் நாட்டின் தெற்கு பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதன்படி நேற்று 05 ஆம் திகதி காலை 4.20 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ரிக்டர் 5.5 ஆக பதிவு நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 5.5 ஆக பதிவாகியுள்ளதாக ஜெர்மனி புவி அறிவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தெற்கு ஈரானில் 10 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இந்நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தால் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் நிலநடுக்கத்தினால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


























Bons Plans
Annuaire
Scan