கனடாவில் ஆபத்தான நோய் பரவும் அபாயம்
.jpg)
7 ஆவணி 2023 திங்கள் 09:25 | பார்வைகள் : 11068
கனடாவில் காலநிலை மாற்றம் ஏற்பட்டுள்ளது
அதன் காரணமாக ஆபத்தான நோய் ஒன்று பரவும் அபாயம் உள்ளதாக சுகாதார துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
பங்கஸ் வகை ஒன்றினால் இந்த நோய் ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
வெலி ஃபீவர் என்று அழைக்கப்படும் இந்த நோயானது தற்பொழுது கனடாவிலும் பரவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
கடுமையான வரட்சி நிலவும் பகுதிகளிலே இந்த நோய் பரவுகை காணப்பட்டது.
குறிப்பாக பாலைவனப் பகுதிகளில் இவ்வாறான நோய் பரவுகை அவதானிக்க முடிவதாக தெரிவிக்கப்படுகிறது.
உலக அளவில் காலநிலை மாற்றத்தினால் தற்பொழுது இந்த காய்ச்சல் பரவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
வெறும் கண்ணுக்கு தென்படாத இந்த பங்கஸ் வேகமாக பரவக்கூடியது எனவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025