மொத்தமாக அழியும் ஆசிய நாடு...! ஆய்வு தகவல்
4 பங்குனி 2024 திங்கள் 13:55 | பார்வைகள் : 4432
ஆண்டுதோறும் சரிவடையும் பிறப்பு விகிதம் காரணமாக 2750ல் தென் கொரிய நாட்டில் மக்களே இல்லாமல் போவார்கள் என்றும் கூறப்படுகிறது.
2022 ஐ விட கடந்த ஆண்டு 19,000 குறைவான குழந்தைகள் பிறந்துள்ளதாகவும் இது 7.7 சதவீதம் குறைவு என்றும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 54 ஆண்டுகளுக்கு முன்பு பதிவுகள் தொடங்கியதில் இருந்து மோசமான பிறப்பு விகிதம் தற்போது பதிவாகியுள்ளது.
அத்துடன் இறப்பு எண்ணிக்கையும் சரிவடைந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
2022 ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் கடந்த ஆண்டு 5.4 சதவிகிதம் இறப்பு சரிவடைந்துள்ளது.
ஆனால் கடந்த நான்கு ஆண்டுகளாக தொடர்ந்து நாட்டில் பிறப்புகளை விட அதிகமான இறப்புகள் பதிவாகியுள்ளன.
இந்த நிலைமை மாறவில்லை என்றால், கடைசி தென் கொரியரும் 2750 ஆம் ஆண்டளவில் இறந்துவிடுவார் என்றே ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தென் கொரிய பெண்கள் மகப்பேறுக்கு மறுப்பதற்கு பல காரணங்கள் கூறப்படுகிறது.
கல்விக்கான செலவுகள், பிள்ளைகள் வளர்ப்பு என்பது எக்காலமும் இல்லாத வகையில் செலவு அதிகரித்துள்ளது.
இந்த சூழலை ஒழிக்கும் வகையில், ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு மாதமும் அரசாங்கம் 640 பவுண்டுகள் அளவுக்கு ஊக்கத்தொகை அளித்து வருகிறது.
தென் கொரியா மட்டுமின்றி, 10 ல் ஒன்பது நாடுகள் நூற்றாண்டின் இறுதிக்குள் குறைந்த மக்கள்தொகை அச்சுறுத்தலை எதிர்கொள்ள இருப்பதாக ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.