Paristamil Navigation Paristamil advert login

கொழும்பில் உள்ள ஹோட்டலுக்குள் ஏற்பட்ட பரபரப்பு

கொழும்பில் உள்ள ஹோட்டலுக்குள் ஏற்பட்ட பரபரப்பு

4 பங்குனி 2024 திங்கள் 02:26 | பார்வைகள் : 2913


கொழும்பு ஆர்மர் வீதியில் உள்ள ஹோட்டலுக்குள் வாள்கள் மற்றும் ஆயதங்களுடன்  நுழைந்த சிலர் பதற்றமான சூழலை ஏற்படுத்தியுள்ளனர்.

குறித்த கும்பல் ஹோட்டலின் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததுடன், ஊழியர்களையும் காயப்படுத்தியுள்ளனர்.

ஹோட்டலை பயன்படுத்துவது தொடர்பாக உரிமையாளருக்கும் குத்தகைதாரர்களுக்கும் இடையில்  தகராறு ஏற்பட்டுள்ளது.

அதன் பின்னரே தாக்குதலுக்கு வழிவகுத்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஹோட்டலின் சொத்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட போது, அங்கு சாப்பிட வந்தவர்கள் உயிர் அச்சத்துடன் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்