Paristamil Navigation Paristamil advert login

சாந்தனின் புகழுடலுக்கு ஆரத்தி எடுத்த தங்கை

சாந்தனின் புகழுடலுக்கு ஆரத்தி எடுத்த தங்கை

3 பங்குனி 2024 ஞாயிறு 16:04 | பார்வைகள் : 8608


மறைந்த சாந்தனின் உடல் அவரின் சொந்த ஊரான உடுப்பிடியில் அமைந்துள்ள வீட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் சில நெகிழ்ச்சியான சம்பவங்கள் பதிவாகியிருந்தது.

சாந்தனின் உடலை வீட்டிற்கு கொண்டுவரும் போது அவரது உடன்பிறந்த சகோதரி ஆரத்தில் எடுத்தமை அங்கிருந்தவர்களை கண்கலங்கச் செய்திருந்தது.

“என் தெய்வம் வீட்டிற்கு வருகின்றது, யாரும் அழக் கூடாது“ என அவரது சகோதரி இதன்போது உருக்கத்துடன் கோரிக்கை விடுத்திருந்தார்.

மறைந்த சாந்தனின் உடல் அவரது வீட்டிற்கு கொண்டுவரப்பட்ட நிலையில் மகனை உயிருடன் பார்க்க வேண்டும் என்று காத்திருந்த தாய் பல ஆண்டுகளுக்கு பின் உயிரற்ற உடலை கண்டு கதறி அழுதார்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்