Paristamil Navigation Paristamil advert login

 காசா மக்களுக்கு உணவு வழங்க தயாராகும்  அமெரிக்கா 

 காசா மக்களுக்கு உணவு வழங்க தயாராகும்  அமெரிக்கா 

3 பங்குனி 2024 ஞாயிறு 09:38 | பார்வைகள் : 3168


இஸ்ரேல் ஹமாஸ் அமைப்புக்கு இடையிலான போர் தீவிரமடைந்து வருகின்றது.

இஸ்ரேல் ஹமாஸ் இடையிலான போர் நடவடிக்கையில், தெற்கு பகுதியில் இருந்து வரும் சிறிய உதவியை தவிர, காசாவிற்குள் வரும் உணவு, தண்ணீர், மற்றும் பிற அத்தியாவசிய பொருட்களின் நுழைவை இஸ்ரேல் தடுத்து நிறுத்தியது.

இதற்கு முன்னதாக, அத்தியாவசிய பொருட்களுடன் தினசரி காசாவிற்குள் நுழையும் 500 விநியோக டிரக்குகளின் உதவியை காசா மக்கள் நம்பியிருந்தனர் என்று UN பாலஸ்தீன அகதிகளுக்கான நிறுவனம் UNRWA தெரிவித்துள்ளது.

காசாவில் பட்டினியால் பாதிக்கும் மேற்பட்டோர் அவதி அடைந்து வருகின்றது.

இந்நிலையில், அமெரிக்கா ராணுவம் தனது முதல் வான்வழி உதவியை வழங்கியுள்ளது.

ராயல் ஜோர்டானிய விமானப்படையுடன் (Royal Jordanian Air Force) இணைந்த கூட்டு முயற்சியில், C-130 ஹெர்குலஸ்(C-130 Hercules) போக்குவரத்து விமானங்களைப் பயன்படுத்தி அமெரிக்க ராணுவம் காசா மக்களுக்கான உதவியை செய்துள்ளது.

வான்வழி மார்க்கமாக செய்யப்பட்ட இந்த உதவியில், சுமார் 38,000 க்கும் மேற்பட்ட உணவு பொட்டலங்கள் அடங்கிய 66 மூட்டைகளை அமெரிக்க ராணுவம் காசாவின் மத்தியதரைக் கடலோரப் பகுதியில் இறக்கியுள்ளது.

வான்வழி உதவியை தொடருவதற்கான அனைத்து பணிகளையும் தொடர்ந்து செய்வதற்கான திட்டமிடல் நடந்து வருவதாகவும் அமெரிக்க ராணுவ அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்