Paristamil Navigation Paristamil advert login

ஒலிம்பிக் பாதுகாப்பு ஆவணங்கள் திருட்டு - சிக்கிய குற்றவாளி!!

ஒலிம்பிக் பாதுகாப்பு ஆவணங்கள் திருட்டு - சிக்கிய குற்றவாளி!!

2 பங்குனி 2024 சனி 15:27 | பார்வைகள் : 16902


பெப்ரவரி மாதம் 26ம் திகதி, பரிஸ் மாநகரசபையின் ஊழியரிடம் இருந்து மடிக்கணிணி மற்றும் இரண்டு clés USB க்கள் அடங்கிய கணணிப்பை களவாடப்பட்டிருந்தது.

அதில் ஒலிம்பிக் விளையாட்டுக்களின் போது, பரிசின் போக்குவரத்து நடவடிக்கைகள் மற்றும் அதன் பாதுகாப்பு தொடர்பான தகவல்கள் அடங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனால் மிகத் தீவிரமான நடவடிக்கையில் இறங்கிய காவற்துறையினர் திருடனைக் கைது செய்துள்ளனர்.

ஏற்கனவே பல குற்றச் செயல்களில் ஈடுபட்டிருந்த 23 வயதுடைய மொரோக்கோவைச் சேர்ந்த இளைஞன் கைது செய்யப்பட்டு, திருடப்பட்ட பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

திருட்டுக் குற்றத்திற்காக இந்தக் குற்றவாளிக்கு 7 மாதச் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் இவ்வளவு முக்கிய தகவல்கள் அடங்கிய கணிணி, மற்றும் தகல் சேமிப்புகளை, இவ்வளவு அஜாக்கிரதையாக பரிஸ் நகரசபை அதிகாரிகள் கையாள்வது, மிகவும் ஆபத்தானது.

6 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

சதீஸ்குமார் அபிசன்

வயது : 21

இறப்பு : 07 Dec 2025

  • Ecology

    2

வர்த்தக‌ விளம்பரங்கள்