Paristamil Navigation Paristamil advert login

காதலரை கைப்பிடிக்கிறார்.. வரலட்சுமி!

காதலரை கைப்பிடிக்கிறார்.. வரலட்சுமி!

2 பங்குனி 2024 சனி 14:04 | பார்வைகள் : 1658


நடிகை வரலட்சுமிக்கு நேற்று திருமண நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் அது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருவதை அடுத்து அவரது ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரும் சரத்குமாரின் மகளுமான வரலட்சுமி ’போடா போடி’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவான இந்த படம் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் அவர் பல திரைப்படங்களில் நடித்தார் என்பதும் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை வரலட்சுமிக்கு தற்போது திருமணம் நிச்சயதார்த்தம் நடந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மும்பையை சேர்ந்த தொழிலதிபர் நிக்கோலஸ் சச்தேவ் என்பவரை தான் அவர் திருமணம் செய்ய உள்ளார். இவர்கள் இருவரும் கடந்த 14 ஆண்டுகளாக காதலித்து வருவதாகவும் இதனை அடுத்து தற்போது திருமணம் நிச்சயதார்த்தம் செய்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று மார்ச் 1ஆம் தேதி மும்பையில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டும் பங்கேற்ற நிச்சயதார்த்தம் குறித்த புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. மேலும் திருமணம் தேதி விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்