Paristamil Navigation Paristamil advert login

சாந்தனுக்கு இறுதி அஞ்சலி: நாளை துக்கதினம் கடைப்பிடிக்க தீர்மானம்

சாந்தனுக்கு இறுதி அஞ்சலி: நாளை துக்கதினம் கடைப்பிடிக்க தீர்மானம்

2 பங்குனி 2024 சனி 13:49 | பார்வைகள் : 17907


சாந்தனின் சடலம் நாளை ஞாயிற்றுக்கிழமை மக்கள் அஞ்சலிக்காக  வைக்கப்படவுள்ளது.

இந்த நிலையில் நாளைய தினம் துக்கதினமாக அனுஸ்டிக்க பொது அமைப்புக்களினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், நாளை காலை 8 மணிக்கு வவுனியாவில் மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்படும் சாந்தனின் சடலம் வைக்கப்பட்டு 9 மணியளவில் மாங்குளம் பகுதிக்கு எடுத்துவரப்படவுள்ளது.

இதனைத் தொடர்ந்து காலை 10.30 மணிக்கு கிளிநொச்சியில் மக்கள் அஞ்சலியின் பின்னராக யாழ்ப்பாணத்திற்கு எடுத்து செல்லப்படவுள்ளது.

யாழ்ப்பாணத்தில் கொடிகாமம் நெல்லியடி ஊடாக உடுப்பிட்டிக்கு கொண்டு செல்லப்பட்டு வல்வெட்டித்துறை தீருவிலில் பிற்பகல் 2.00 மணி முதல் 3.00 மணிவரை மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்படவுள்ளது.

மாலை அவரது வீட்டிற்கு எடுத்துச்செல்லப்பட்டு எதிர்வரும் திங்கட்கிழமை எள்ளங்குளம் மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளதாக  குடும்பத் தகவல்கள்  தெரிவிக்கின்றன.

6 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

சதீஸ்குமார் அபிசன்

வயது : 21

இறப்பு : 07 Dec 2025

  • Ecology

    2

வர்த்தக‌ விளம்பரங்கள்