யாழ். பல்கலை மாணவர் பரிதாபமாக உயிரிழப்பு
6 ஆவணி 2023 ஞாயிறு 10:32 | பார்வைகள் : 13714
யாழ்ப்பாணம் - ஆனைப்பந்தி பகுதியில் சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற வாகன விபத்தில் படுகாயமடைந்த மாணவன் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் சனிக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
நுவரெலியாவை சேர்ந்த கருப்பையா பிரதீசன் (வயது 22) எனும் மாணவரே உயிரிழந்துள்ளார்.
கடந்த வியாழக்கிழமை (3) ஆனைப்பந்தி சந்தியில் மாணவன் பயணித்த மோட்டார் சைக்கிளும், பிறிதொரு வாகனமும் மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த மாணவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே நேற்றைய தினம் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.


























Bons Plans
Annuaire
Scan