உலகின் பணக்கார செல்லப்பிராணி
1 பங்குனி 2024 வெள்ளி 16:02 | பார்வைகள் : 12524
உலகின் பணக்கார செல்லப்பிராணி என்னும் பெருமையைப் பெற்றுள்ளது ஒரு வளர்ப்பு நாய்.
பஹாமா தீவுகளில் சொந்தமாக வீடு முதல் சொந்தமாக ஆடம்பரப் படகு என, பணக்கார மனிதர்களுக்கு இணையாக சொகுசாக வாழ்ந்துவருகிறது அந்த நாய்.
பாடகி மடோனா முன்னர் வாழ்ந்துவந்த வீட்டில் தற்போது வாழ்ந்துவரும் அந்த நாயின் பெயர் ஆறாம் குந்தர் (Gunther VI) ஆகும்.
ஜெர்மன் ஷெப்பர்டு வகை நாயான குந்தர், 65 மில்லியன் பவுண்டுகள் பதிப்புடைய கரீபியன் வகை வீடு ஒன்றில் வாழ்ந்துவருகிறது.
குந்தனின் சொத்து மதிப்பு, 300 மில்லியன் பவுண்டுகளாகும்.
குந்தனுக்கு எப்படி இவ்வளவு பணம் கிடைத்தது என்று பார்த்தால்,
குந்தனின் முன்னாள் உரிமையாளரான செல்வந்தரான Karlotta Leibenstein என்னும் ஜெர்மானிய சீமாட்டி,
தான் மரணமடையும் நேரத்தில் தனக்கு குடும்பம் என்று எதுவும் இல்லாததால்,
தன் சொத்து முழுவதையும் தான் மிகவும் நேசித்த தனது செல்லப்பிராணியாகிய குந்தனுக்கு எழுதிவைத்துள்ளார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan