'வாடிவாசல்' படத்தில் சூர்யாவுக்கு பதில் இவரா?

1 பங்குனி 2024 வெள்ளி 15:16 | பார்வைகள் : 10784
வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக இருக்கும் ‘வாடிவாசல்’ திரைப்படத்தில் சூர்யா நடிக்க இருந்த நிலையில் தற்போது அவர் அந்த படத்தில் விலகி விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தில் இருந்து சூர்யா விலகி விட்டால் சூர்யாவுக்கு பதில் சூரி நடிப்பார் என்று வதந்தி கிளம்பிய நிலையில் தற்போது அந்த வதந்தி கிட்டத்தட்ட உண்மையாகி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
‘வாடிவாசல்’ திரைப்படத்தின் அறிவிப்பு வெளியாகி கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் ஆகியும் அந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்காத நிலையில் திடீரென இந்த படத்தில் இருந்து ஒரு சில காரணங்களால் சூர்யா விலகி விட்டதாக கூறப்பட்டது.
இதனை அடுத்து இந்த படத்தில் சூர்யாவுக்கு பதில் தனுஷ் தான் நடிக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில் தனுஷ் ஏற்கனவே அதிக படங்கள் கையில் வைத்திருப்பதால் இந்த படம் இன்னும் தாமதம் ஆகலாம் என்று கூறப்பட்டது.
இந்த நிலையில் ’விடுதலை’ படத்தின் படப்பிடிப்பின்போது சூரியின் நடிப்பில் முழுமையான திருப்தி அடைந்த வெற்றிமாறன், ‘வாடிவாசல்’ படத்தில் சூரியையே நடிக்க வைத்து விடலாம் என்று முடிவு செய்ததாகவும், ஒரு சில காட்சிகளை நடிக்க வைத்து பார்த்தபோது அவர் திருப்தி அடைந்ததால் சூரியை வைத்து ‘வாடிவாசல்’ படத்தை அவர் இயக்க முடிவு செய்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025