அமெரிக்காவில் 10 பெண்களுடன் ஒரே நேரத்தில் திருமணம் செய்த இளைஞர்
6 ஆவணி 2023 ஞாயிறு 09:27 | பார்வைகள் : 9622
அமெரிக்காவின் நியூயார்க் நகரை சேர்ந்த 28 வயதான லஸ்டின் இம்மானுவேல் என்ற இளைஞர் கடந்த மாதம் ஜூலை 31 ம் திகதி 10 பெண்களை ஒரே நேரத்தில் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இந்த திருமண விழாவை லஸ்டின் கடற்கரையில் தன்னுடைய 10 மனைவிகளுடனும் கொண்டாடினார்.
இமானுவேல் இது தொடர்பாக சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்து, இன்று 10 பெண்களை திருமணம் செய்து கொண்டேன்.
அனைவரும் தற்போது என் மனைவிகள் என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் அந்த வீடியோவில் மணமகன் லஸ்டின் இம்மானுவேலை 9 இளம் பெண்கள் வெள்ளை நிற திருமண உடையுடன் கையில் பூங்கொத்து வைத்து கொண்டு சுற்றி வருகின்றனர்.
மேலும் இன்னொரு பெண் லஸ்டின் இம்மானுவேல் மடியில் அமர்ந்துள்ளார்.
இமானுவேல் சமூக ஊடகங்களில் பிரபலமானவர் மற்றும் பெண்களுக்கு மசாஜ் செய்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே சமூக ஊடகத்தில் அவர் தன்னுடைய திருமண வீடியோவை பகிர்ந்து இருந்த நிலையில், அந்த வீடியோ இதுவரை 5,81,000க்கும் அதிகமான பார்வையாளர்களை ஈர்த்துள்ளது.


























Bons Plans
Annuaire
Scan