கங்குலியின் வாழ்க்கை வரலாற்று படத்தை இயக்கும் ரஜினி மகள்?

1 பங்குனி 2024 வெள்ளி 13:43 | பார்வைகள் : 6517
ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் விரைவில் ஒரு திரைப்படத்தை இயக்க இருப்பதாகவும் அதற்கான ஆரம்பகட்ட பணிகளை அவர் தொடங்கி விட்டதாக கூறப்பட்ட நிலையில் தற்போது அவர் இயக்கும் திரைப்படம் பிரபல கிரிக்கெட் வீரரின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் என்று கூறப்படுகிறது.
ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ’லால் சலாம்’ திரைப்படத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார் என்பதும் இந்த படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை என்றும் கூறப்பட்டது.
இந்த நிலையில் சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்திலும் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாகவும் இந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்பட்டது.
இந்த நிலையில் தற்போது கசிந்த தகவல் படி சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கும் திரைப்படம் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் சவுரவ் கங்குலியின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் வேண்டும் இந்த படத்தை சாஜித் நாடியவாலா தயாரிக்க இருப்பதாகவும் இது ’தலைவர் 172’ படமாக அமைய இருப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் கூட ரஜினிகாந்த் மற்றும் சாஜித் நாடியவாலா சந்திப்பு குறித்த புகைப்படம் இணையத்தில் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.