பரிஸ் : தொலைக்காட்சி பிரபலத்தின் வீட்டில் கொள்ளை!
 
                    1 பங்குனி 2024 வெள்ளி 13:06 | பார்வைகள் : 13166
தொலைக்காட்சி செய்தி ஊடகவியலாளரான Anne-Sophie Lapix இன் வீட்டில் கொள்ளை முயற்சி ஒன்று இடம்பெற்றுள்ளது.
பெப்ரவரி 29, நேற்று வியாழக்கிழமை இரவு 10 மணி அளவில் ஊடகவியலாளர் Anne-Sophie Lapix இன் வீட்டியில் கொள்ளை முயற்சி இடம்பெற்றுள்ளது. பரிஸ் 16 ஆம் வட்டாரத்தில் உள்ள அவரது வீட்டின் ஜன்னல் உடைக்கப்பட்டுள்ளது. உடனடியாக அவர் காவல்துறையினரை அழைத்துள்ளார்.
பின்னர் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வர, கொள்ளையர்கள் தப்பி ஓடியுள்ளனர். இதனால் கொள்ளை முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லை. தடயவியல் நிபுணர்கள் ஆய்வுகளை மேற்கொண்டுவருகின்றனர்.
ஊடகவியலாளர் Anne-Sophie Lapix தினமும் France 2 தொலைக்காட்சியின் செய்தி பிரிவில் கடமையாற்றி வருகிறமை குறிப்பிடத்தக்கது.
 வாங்க - விற்க | வேலை
வாங்க - விற்க | வேலை  நாணய மாற்று
நாணய மாற்று







 Climatiseur : 1 890€ க்கு இயந்திரம் மற்றும் நிறுவல்
        Climatiseur : 1 890€ க்கு இயந்திரம் மற்றும் நிறுவல்         
     


 
        
         
        
         
        
         
        
         
        
        
















 Bons Plans
Bons Plans Annuaire
Annuaire Scan
Scan