இலங்கையை வந்தடைந்தது சாந்தனின் பூதவுடல் - யாழ்ப்பாணம் கொண்டு செல்ல நடவடிக்கை
1 பங்குனி 2024 வெள்ளி 07:52 | பார்வைகள் : 14712
சாந்தனின் உடலைத் தாங்கி விமானம் சற்று முன்னர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.
இதன் பின்னர் சாந்தனின் உடல் கொழும்பில் இருந்து தரைவழியாக யாழ்ப்பாணம் கொண்டு செல்லப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சாந்தனின் உடல் யாழ்ப்பாணத்தை சென்றடைந்ததும், அங்குள்ள தனியார் மலர்சாலையில் அவரது பூதவுடல் வைக்கப்படவுள்ளதாகவும், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை உடுப்பிட்டியில் உள்ள அவரது இல்லத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு பின்னர் அடக்கம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சாந்தனின் இறுதிகிரியைகள் தொடர்பான தகவல்கள் குறித்து இதுவரை எதுவும் தெரியவிக்கப்படவில்லை.


























Bons Plans
Annuaire
Scan