சிம்பு கேட்ட சம்பளத்தால் தெறித்தோடிய பிரபல தயாரிப்பு நிறுவனங்கள்?
29 மாசி 2024 வியாழன் 12:33 | பார்வைகள் : 12605
சிம்பு தற்போது தனது 48-வது திரைப்படமான ‘STR48’ திரைப்படத்திற்காக தயாராக வருகிறார். இந்த திரைப்படத்தினை இயக்குனர் தேசிங் பெரியசாமி இயக்குகிறார். படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி பல மாதங்கள் ஆகியும் இன்னும் படப்பிடிப்பு சில காரணங்களால் தொடங்காமல் இருக்கிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த திரைப்படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் மட்டும் வெளியாகி இருந்தது. ஆனால், படத்தின் தலைப்பு என்னவென்று மற்றும் படத்தில் நடிக்கும் பிரபலங்கள் இசையமைப்பாளர் யார் என்று எந்த தகவலும் இன்னும் அறிவிக்காமல் இருக்கிறது.
இந்த நிலையில் இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு தொடங்க தாமதமாகும் என்பதால் சிம்பு அதிரடியான முடிவு ஒன்றை எடுத்துள்ளாராம். அது என்னவென்றால் இந்த திரைப்படம் இன்னும் சில நாட்கள் ஆகும் என்பதால் அதற்குள் ஏதாவது சின்னதாக ஒரு படம் செய்யலாம் என்ற எண்ணத்தில் சிம்பு இருக்கிறாராம்.
இதனால் உடனடியாக பிரபல தயாரிப்பு நிறுவனங்களான சத்தியஜோதி பிலிம்ஸ் நிறுவனம் மற்றும் 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் ஆகியோரிடம் தொடர்பு கொண்டு நாம் இணைந்து ஒரு படம் பண்ணலாம் என்று இரண்டு தயாரிப்பு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினாராம். அவர்களும் சிம்புவே கால் செய்து படம் பண்ணலாம் என்று கேட்டவுடன் சந்தோஷமாக படம் செய்யலாம் என்று கூறினார்களாம்.
பேசி முடித்த பிறகு சிம்பு தனக்கு நடிக்க சம்பளமாக இவ்வளவு கோடி வேண்டும் என்று ஒரு தொகையை கேட்டாராம். அதற்கு உடனடியாகவே அந்த இரண்டு தயாரிப்பு நிறுவனங்களும் பேச்சுவார்த்தை அப்புறம் வைத்துக் கொள்ளலாம் என்பது போல தெரித்து ஓடிவிட்டதாம்
🔥 இன்றைய சிறப்பு சலுகை
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1
17 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan