இலங்கையில் கடும் வெப்பநிலை - வேகமாக அதிகரிக்கும் இளநீர் விலை

28 மாசி 2024 புதன் 15:54 | பார்வைகள் : 6249
இலங்கையில் நாட்டில் நிலவும் அதிக வெப்பநிலை காரணமாக இளநீரின் தேவை அதிகரித்துள்ளது.
இதனால் கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இளநீர் ஒன்றின் விலை 200 ரூபாவாக அதிகரித்துள்ளது.
கொழும்பு துறைமுக நுழைவாயிலுக்கு அருகில் உள்ள ஆரஞ்சு கடையொன்றில் இளநீர் ஒன்று 200 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டது.
அத்துடன், வெளிநாட்டவர்கள் அதிக ஆர்வத்துடன் இளநீரை வாங்கி பருகி வருகின்றனர்.
இரண்டு வாரங்களுக்கு முன்னர் கொழும்பில் இளநீர் ஒன்றின் விலை 120 முதல் 140 ரூபா வரை காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.