சரத்குமாரின் முதல் மனைவி சினிமாவில் நடிக்கிறாரா?
 
                    28 மாசி 2024 புதன் 14:11 | பார்வைகள் : 8522
நடிகர் சரத்குமாரின் முதல் மனைவி சாயா தேசிய விருது பெற்ற இயக்குனரின் திரைப்படத்தில் நடித்து வருவதாக கூறப்படுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் சரத்குமார் கடந்த 1984 ஆம் ஆண்டு சாயா என்பவரை திருமணம் செய்து கொண்டார் என்பதும் இந்த தம்பதிகளுக்கு பிறந்தவர் தான் நடிகை வரலட்சுமி சரத்குமார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சரத்குமார் தனது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2000 ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்த நிலையில் அதன் பின் 2001 ஆம் ஆண்டு நடிகை ராதிகாவை திருமணம் செய்து கொண்டார்.
சாயா விவாகரத்துக்கு பின்னர் வரலட்சுமி சரத்குமார் உடன் இருந்து வருகிறார் என்பதும் அவருடைய சில அமைப்புகளை கவனித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்து வரும் ’வணங்கான்’ என்ற திரைப்படத்தில் சாயாசிங் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் அவருடைய கேரக்டர் திருப்புமுனையை ஏற்படுத்தும் வகையில் இருக்கும் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன. இந்த படம் வெற்றி பெற்றால் சாயாசிங் தொடர்ச்சியாக அம்மா வேடத்தில் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
 வாங்க - விற்க | வேலை
வாங்க - விற்க | வேலை  நாணய மாற்று
நாணய மாற்று







 KBis தேவைகளை குறைந்த கட்டணத்தில் பெற்றுக்கொள்ள.
        KBis தேவைகளை குறைந்த கட்டணத்தில் பெற்றுக்கொள்ள.         
     


 
        
         
        
         
        
         
        
         
        
        
















 Bons Plans
Bons Plans Annuaire
Annuaire Scan
Scan