சர்வதேச அரங்கில் 'கொட்டுக்காளி' படத்திற்கு குவிந்த பாராட்டு!
 
                    28 மாசி 2024 புதன் 14:09 | பார்வைகள் : 10397
'கூழாங்கல்' படத்தின் இயக்குனர் பி.எஸ் வினோத்ராஜ் இயக்கத்தில், காமெடி நடிகர் சூரி 'விசாரணை' படத்தை தொடர்ந்து கதையின் நாயகனாக நடிக்க கமிட் ஆன திரைப்படம் 'கொட்டுக்காளி'. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் குறித்த டீசர் ஒன்று கடந்த ஆண்டு வெளியான போதே இப்படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்தது.
இதை தெடர்ந்து, தற்போது இந்த படத்தின் அணைத்து பணிகளும் நிறைவடைந்து... ரிலீசுக்கு தயாராக உள்ள நிலையில், இந்த படத்தை படக்குழு பல்வேறு விருது விழாக்களில் திரையிட திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. அந்த வகையில், பெர்லினாலே 2024 என்று அழைக்கப்படும் 74வது ஆண்டு பெர்லின் சர்வதேச திரைப்பட விழா கடந்த பிப்ரவரி 15 முதல் 25 வரை ஜெர்மனியின் நடைபெற்றது. இதில் கென்ய-மெக்சிகன் நடிகை லூபிடா நியோங்கோ ஆகியோர் ஜூரி தலைவராக உள்ளனர்.
பாடி டபுள் இல்லாமல் நடித்த வருணின் அர்ப்பணிப்பு உண்மையிலேயே ஈர்க்கக்கூடியது! கெளதம் மேனன் புகழாரம்!
இந்த சர்வதேச திரைப்பட விழாவில், சிவகார்த்திகேயன் தயாரிப்பில், சூரி நடிப்பில் உருவாகி உள்ள 'கொட்டுக்காளி திரைப்படம் திரையிடப்பட்டு அணைத்து தரப்பினர் மத்தியிலும் பாராட்டுக்களை பெற்றுவருகிறது. குறிப்பாக மலையாள திரைப்படங்களான ஹெலன், கும்பலாங்கி நைட், கப்பெல்லா, ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமான ஆனா பெல் நடிப்பை பலர் பாராட்டுவதை பார்க்க முடிகிறது.
கொட்டுக்காளியின் முதல் சர்வதேச அரங்கிற்கு நன்றி என சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ள வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இந்த பதிவில் சிவகார்த்திகேயன் கூறியுள்ளதாவது... பெர்லினாலே
, மற்றும் நம்பமுடியாத சில பதில் நம் இதயங்களில் ஒரு நீடித்த முத்திரையை விட்டுச் சென்றது. மறக்க முடியாத தருணங்களுக்கு நன்றி என தெரிவித்துள்ளார். இப்படத்திற்கு குவிந்து வரும் பாராட்டுக்கள் படம் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 
 வாங்க - விற்க | வேலை
வாங்க - விற்க | வேலை  நாணய மாற்று
நாணய மாற்று







 CCTV - VIDÉO SURVEILLANCE 24 மணி நேர வீடியோ கண்காணிப்பு
        CCTV - VIDÉO SURVEILLANCE 24 மணி நேர வீடியோ கண்காணிப்பு         
     


 
        
         
        
         
        
         
        
         
        
        
















 Bons Plans
Bons Plans Annuaire
Annuaire Scan
Scan