உடலை கட்டழகாக்க நாணயங்களை விழுங்கிய இளைஞன்

28 மாசி 2024 புதன் 10:13 | பார்வைகள் : 5278
உடல் கட்டழகாக வரும் என்பதற்காக நாணயங்களை இளைஞன் ஒருவர் விழுங்கிய விபரீத ஒன்று சம்பவம் இடம்பெற்றுள்ளது.
டில்லியைச் சேர்ந்த மருத்துவர்கள் ஸ்கிசோஃப்ரினியா நோயாளியான 26 வயது இளைஞரின் குடலில் இருந்து 39 நாணயங்கள் மற்றும் 37 காந்தங்களை வெற்றிகரமாக அகற்றியுள்ளதாகக் கூறியுள்ளனர்.
பொடி பில்டிங்கில் ஆர்வம் கொண்டிருந்த அவர், துத்தநாகம் உடற்கட்டை உருவாக்க உதவும் என்று கருதி அவற்றை விழுங்கியுள்ளார் எனவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
டெல்லியில் வசிக்கும் அவர் அறுவை சிகிச்சைக்குப் பிறகு நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
நாணயங்களில் இருக்கும் துத்தநாகம் உடலைக் கட்டமைக்க உதவுகிறது என்றும் காந்தம், நாணயம் ஆகியவை குடலில் இருந்தால் அவை துத்தநாகத்தை உறிஞ்சுவதற்கு உதவும் என்றும் நினைத்ததாகத் தெரிவித்துள்ளார்.
மருத்துவர்களின் கூற்றுப்படி, நோயாளி 20 நாட்களுக்கும் மேலாக மீண்டும் மீண்டும் வாந்தி மற்றும் வயிற்றில் வலி இருப்பதாக புகார் கூறி மருத்துவமனைக்கு வந்துள்ளார்.
அவரால் எதுவும் சாப்பிட முடியவில்லை. கடந்த 20-22 நாட்களுக்கு முன்பு அவர் நாணயங்கள் மற்றும் காந்தங்களை உட்கொண்டதாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.
இதனால் அவருக்கு CT ஸ்கேன் செய்யப்பட்டது.
இதில் அவரது வயிற்றில் நாணயங்கள் மற்றும் காந்தங்கள் இருப்பது உறுதியானது.
இதனால் அவருக்கு குடல் அடைப்பு ஏற்பட்டிருந்தது.
உடனடியாக அவருக்கு அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
அறுவை சிகிச்சையின் போது, சிறுகுடலில் இரண்டு வெவ்வேறு பகுதிகளில் காந்தங்கள் மற்றும் நாணயங்கள் இருப்பது கண்டறியப்பட்டது.
ஏறக்குறைய இரண்டு மணி நேரம் நீடித்த இந்த அறுவை சிகிச்சைக்குப் பின் அனைத்து நாணயங்கள் மற்றும் காந்தங்கள் அகற்றப்பட்டது உறுதி செய்யப்பட்டது.
இதுபோன்ற பொருள்களை உட்கொள்வது உயிருக்கு ஆபத்தானது, இப்படிச் செய்யவே கூடாது என்பதை வைத்தியர்கள் எச்சரித்துள்ளனர்.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1