இலங்கைக்கு வரும் புதிய வெளிநாட்டு எரிபொருள் நிறுவனம்

26 மாசி 2024 திங்கள் 15:59 | பார்வைகள் : 11904
இலங்கையின் எரிபொருள் சந்தையின் போட்டித்தன்மையை அதிகரிக்கும் வகையில் மற்றுமொரு வெளிநாட்டு நிறுவனம் இலங்கை சந்தையில் காலடி வைத்துள்ளது.
அவுஸ்திரேலியாவின் "யுனைடெட் பெட்ரோலியம்" நிறுவனமே இலங்கையில் எரிபொருள் விற்பனையை ஆரம்பிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில், அந்த நிறுவனத்துக்கும் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சுக்கும் இடையே கடந்த 22ம் திகதி ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
நாட்டில் தற்போது இயங்கி வரும் 150 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் அந்த நிறுவனத்துக்கு மாற்றப்படவுள்ளதுடன் மேலும் 50 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் புதிதாக நிறுவப்பட உள்ளன.
இலங்கையில் எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக "யுனைடெட் பெட்ரோலியம் லங்கா லிமிட்டெட்" என்ற நிறுவனத்தை பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025