◉ ஆசிரியருக்கு கொலை மிரட்டல்! - சிறுவன் கைது!
26 மாசி 2024 திங்கள் 12:20 | பார்வைகள் : 3576
வரலாற்று பாட ஆசிரியருக்கு கொலை மிரட்டல் அச்சுறுத்தல் விடுத்த சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
11 வயதுடைய சிறுவன் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் Goussainville (Val d'Oise) நகரில் இடம்பெற்றுள்ளது. இன்று பெப்ரவரி 26 ஆம் திகதி, திங்கட்கிழமை காலை குறித்த மாணவன், தனது வரலாற்று பாட ஆசிரியருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.
சிறுவன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. மேலதிக விபரங்கள் பின்னர் வெளியாகும்.