Paristamil Navigation Paristamil advert login

அமெரிக்காவில்  விமனப்படைவீரர் தீக்குளிப்பு!

அமெரிக்காவில்  விமனப்படைவீரர் தீக்குளிப்பு!

26 மாசி 2024 திங்கள் 09:34 | பார்வைகள் : 8714


அமெரிக்காவில் விமானப்படை வீரர் தீக்குளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

      அமெரிக்காவில் வாஷிங்டனில் இஸ்ரேல் தூதரகத்தில் நேற்று பிற்பகல் விமான படை வீரர் உடை அணிந்த ஒருவர் இந்த அலுவலகத்துக்கு வந்து திடீரென அவர் உடல் முழுவதும் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தீ மளமளவென அவரது உடல் முழுவதும் பரவியது. இதனால் அவர் அலறி துடித்த நிலையில்  அங்கிருந்த மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தீயை அணைத்து அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

அங்கு அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.  இந்நிலையில்  தீக்குளிப்பதற்கு முன் விமானப்படை வீரர் வெளியிட்ட   வீடியோ வெளியாகி உள்ளது. அதில்,

இனிமேலும் நான் இனப்படு கொலைக்கு (காசாவில்)உடந்தையாக இருக்க மாட்டேன். நான் ஒரு தீவிர எதிர்ப்பு செயலில் ஈடுபட உள்ளேன் என கூறி உள்ளதாக தெரிகிறது.

இந்த தீக்குளிப்பு சம்பவத்தை தொடர்ந்து இஸ்ரேல் தூதரகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டு உள்ளதுடன் தீவிர விசாரணை இடம்பெற்று வருகின்றது.

பாலஸ்தீனத்தின் காசா மீது இஸ்ரேல் படையினர் கடந்த 3 மாதங்களுக்கு மேலாக கடுமையான தாக்குதல் நடத்தி வருகின்றனர். ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக இந்த சண்டை நடந்து வருகிறது.

இதில் அப்பாவி பொதுமக்கள், குழந்தைகள் என 26 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாகி விட்டனர். காசாவில் நடந்து வரும் போரை நிறுத்துமாறு உலக நாடுகள் கோரிக்கை விடுத்து வந்த போதிலும் அதனை இஸ்ரேல் நிராகரித்து வருகிறது.

இந்த நிலையில் இப்பிரச்சினை தொடர்பாக அமெரிக்காவில் விமான படையை சேர்ந்த வீரர் ஒருவர் தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

9 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

RAJADURAI

FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI

வயது : 44

இறப்பு : 14 Aug 2025

  • Ecology

    1

  • Live Link

வர்த்தக‌ விளம்பரங்கள்