'ராயன்' அடுத்த நடிகையை அறிமுகம் செய்த தனுஷ்..!

25 மாசி 2024 ஞாயிறு 16:23 | பார்வைகள் : 8839
தனுஷின் 50வது திரைப்படமான ‘ராயன்’ என்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் ரிலீசாக இருக்கும் நிலையில் இந்த படத்தில் நடித்த கேரக்டர்களின் போஸ்டர்களை கடந்த சில நாட்களாக தனுஷ் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம்.
குறிப்பாக இந்த படத்தில் நடித்த எஸ்ஜே சூர்யா, செல்வராகவன், பிரகாஷ்ராஜ் மற்றும் துஷாரா விஜயன் ஆகியோர்களின் போஸ்டர்களை தனுஷ் வெளியிட்டு இருந்தார் என்பதும் அனைத்தும் கருப்பு வெள்ளையில் கலக்கலான போஸ்டராக இருந்ததை அடுத்து இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது என்பதும் தெரிந்தது.
இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் நடித்த இன்னொரு நாயகியான அபர்ணா பாலமுரளியின் போஸ்டரை தனுஷ் சற்றுமுன் வெளியிட்டுள்ளார். மற்ற போஸ்டர்களை போலவே இந்த போஸ்டரும் பிளாக் அண்ட் ஒயிட்டில் அசத்தலாக உள்ளது என்பதும் இந்த போஸ்டர்கள் படத்தை உடனே பார்க்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பை அதிகரித்து வருகிறது என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தனுஷின் 50வது படமான ‘ராயன்’ படத்தை அவரே இயக்கி நடித்து வரும் நிலையில் இந்த படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
1