Paristamil Navigation Paristamil advert login

டீன் - ஏஜ்க்கு மாறிய ஜோதிகா..

டீன் - ஏஜ்க்கு மாறிய ஜோதிகா..

25 மாசி 2024 ஞாயிறு 10:40 | பார்வைகள் : 7662


நடிகை ஜோதிகா சமீபத்தில் எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படங்களில் அவரை பார்க்கும்போது டீன் ஏஜ் பெண் போல் மாறி உள்ளதாக ரசிகர்கள் கமெண்ட் பகுதியில் பதிவு செய்து வருகின்றனர்.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக கடந்த 2000ஆம் ஆண்டுகளில் இருந்தவர் ஜோதிகா என்பதும் அஜித், விஜய், சூர்யா உள்பட பல முன்னணி நடிகர்களுடன் அவர் இணைந்து நடித்துள்ளார் என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில் கடந்த 2006 ஆம் ஆண்டு நடிகர் சூர்யாவை திருமணம் செய்த பின்னர் திரையுலகில் இருந்து விலகினார் என்பதும் அதன் பிறகு சில வருடங்களுக்கு பின் மீண்டும் ரீஎண்ட்ரி ஆன ஜோதிகா நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் மட்டும் நடித்து வருகிறார் என்பதும் சமீபத்தில் கூட அவர் மம்முட்டியுடன் நடித்த ’காதல் தி கோர்’ என்ற திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஒருபுறம் குடும்ப தலைவியாகவும் இன்னொரு புறம் சினிமாவிலும் நடித்து வரும் ஜோதிகா சில மணி நேரத்துக்கு முன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்தில் அவர் இளமையாக இருப்பதை பார்த்த ரசிகர்கள் 45 வயதிலிருந்து எப்படி டீன் ஏஜ்க்கு மாறினீர்கள் என்று கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர். இந்த புகைப்படங்களுக்கு 2 லட்சத்துக்கும் அதிகமான லைக்ஸ் குவிந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

6 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

சதீஸ்குமார் அபிசன்

வயது : 21

இறப்பு : 07 Dec 2025

  • Ecology

    2

வர்த்தக‌ விளம்பரங்கள்