Paristamil Navigation Paristamil advert login

வெளிநாடு செல்ல காத்திருக்கும் கனேடியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

வெளிநாடு செல்ல காத்திருக்கும் கனேடியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

25 மாசி 2024 ஞாயிறு 10:24 | பார்வைகள் : 7473


கனடாவில் தட்டம்மை தடுப்பூசி குறித்து அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. 

கனடாவின் பிரதம மருத்துவ அதிகாரி டொக்டர் திரேசா டேம் இந்த விடயத்தை அறிவித்துள்ளார்.

நாட்டை வெளியேறுவோர் தட்டம்மை தடுப்பூசிகள் இரண்டு ஏற்றிக் கொண்டதனை உறுதி செய்ய வேண்டுமென கோரப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில் தட்டம்மை நோயாளர் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்துச் செல்லும் போக்கினை பதிவு செய்துள்ளது.

வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வோர் ஊடாக நாட்டிற்குள் தட்டம்மை நோய் பரவுகை ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்வோர் தட்டம்மை தடுப்பூசிகளை கட்டாயம் ஏற்றிக் கொண்டிருக்க வேண்டுமென டொக்டர் திரேசா டேம் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்வதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னதாக இவ்வாறு தடுப்பூசி ஏற்றிக் கொண்டிருக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கனடாவில் தட்டம்மை நோய் அதிகளவில் பரவாத போதிலும் நோய்த் தொற்று பரவும் சாத்தியங்களை மறுப்பதற்கில்லை என மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

வர்த்தக‌ விளம்பரங்கள்