டைட்டானிக் புகழ் பிரபல பாடகிக்கு அபூர்வ நோய்
.jpg)
5 ஆவணி 2023 சனி 09:12 | பார்வைகள் : 10358
புகழ் பெற்ற டைட்டானிக் திரைப்படத்தில் இடம்பெற்ற ’Every night in my dreams I see you’ என்ற பாடல் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
அந்தப் பாடலைப் பாடியவர் பிரபல கனேடிய பாடகியான செலின் டயான்.
அவரது குரலுக்கு பலரும் அடிமையாக உள்ளனர்.
இந்நிலையில் செலின் அபூர்வ நோய் ஒன்றினால் பாதிக்கப்பட்டுள்ளார் என அவருடைய சகோதரி தெரிவித்துள்ளார்.
55 வயதாகும் செலின், தான் stiff-person syndrome என்னும் அபூர்வ நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்,
அதனால், தான் நினைத்தபடி தன்னால் பாடமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
அதனால், அவர் பங்கேற்க இருந்த பல இசை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
செலினுக்கு உதவுவதற்காக அவரது சகோதரிகளில் ஒருவரான லிண்டா அவருடனேயே தற்போது தங்கியுள்ளார்.
அவரது மற்றொரு சகோதரியான Claudette, லிண்டாவை தொலைபேசியில் அழைத்து செலினுடைய உடல் நிலை குறித்து விசாரித்துள்ளார்.
அப்போது, செலினுடைய பிரச்சினைக்கு சிகிச்சை அளிப்பதற்கான எந்த மருந்தும் கிடைக்கவில்லை என லிண்டா தெரிவித்துள்ளார்.
செலின், உலகின் தலைசிறந்த நிபுணர்களுடன் இந்த நோய் தொடர்பில் ஆலோசனை நடத்திவருவதாக அவரது சகோதரி தெரிவித்துள்ளார்.
என்னைக் கேட்டால், செலினுக்கு அதிகம் தேவைப்படுவது ஓய்வு என்று கூறும் Claudette, ஒரு கட்டத்தில் மனிதர்கள் எல்லோரிடமும் நம் இதயம் எதையோ சொல்ல முயற்சி செய்யும், அதற்கு செவி கொடுப்பது அவசியம் என்கிறார் அவர்.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1