Paristamil Navigation Paristamil advert login

 எதிர்கட்சி தலைவரின் மனைவி, மகளை சந்தித்து ஆறுதல் கூறிய ஜோ பைடன்!

 எதிர்கட்சி தலைவரின் மனைவி, மகளை சந்தித்து ஆறுதல் கூறிய ஜோ பைடன்!

24 மாசி 2024 சனி 09:06 | பார்வைகள் : 8871


ரஷ்ய சிறையில் உயிரிழந்த அந்நாட்டு எதிர்கட்சி தலைவர் அலெக்சி நவல்னியின் மனைவியையும், மகளையும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சந்தித்தார்.

புடின் மீது ஏராளமான ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தி வந்த நவல்னி மீது பல்வேறு மோசடிளை சுமத்தி 30 ஆண்டு புடின் அரசாங்கம் சிறை தண்டனை விதித்தது.

இந்நிலையில் ரஷ்யாவில் அதிபர் தேர்தல் நெருங்கிவருகி்றது.

அண்மையில் ஆர்டிக் பிரதேசத்தில் உள்ள கொடூரமான சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட நவல்னி, கடந்த வெள்ளிக்கிழமை உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நவல்னியின் மறைவுக்கு ஏதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, ரஷ்யாவின் பொருளாதாரம் மற்றும் தொழில்துறையை பாதிக்கும் வகையில் பல புதிய தடைகளை விதிக்கப்போவதாக ஜோ பைடன் தெரிவித்தார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்