கப்பல் மோதியதால் பாலம் இடிந்து விழுந்து விபத்து! அமெரிக்காவில் கோர சம்பவம்

26 பங்குனி 2024 செவ்வாய் 11:36 | பார்வைகள் : 8196
அமெரிக்காவில் நீண்ட பாலமொன்றின் மீது பாரிய கப்பல் மோதியதால், அப்பாலம் ஆற்றில் இடிந்து வீழ்ந்தது. இதனால் பல வாகனங்களும் ஆற்றில் வீழ்ந்துள்ளன.
மேரிலண்ட் மாநிலத்தின் பால்டிமோர் நகரிலுள்ள பிரான்சிஸ் ஸ்கொட் கீ பிரிட்ஜ் எனும் பாலமே இவ்வாறு இடிந்தது.
மொத்தமாக 2.6 கிலோமீற்றர் (1.6 மைல்) நீளமான இப்பாலத்தின் மீது இன்று அதிகாலை 1.27 மணியளவில் பாரிய சரக்குக் கப்பலொன்று, மோதியதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதனால் பாலம் இடிந்ததால் பல வாகனங்களும் ஆற்றில் வீழ்ந்தன.
அவ்வேளையில் குறைந்தபட்சம் 20 நிர்மாண ஊழியர்கள் பாலத்தில் இருந்தனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை குறைந்தபட்சம் 20 பேர் காணாமல் போயுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025