சுவிட்சர்லாந்தில் தொடர் பேருந்தை போதையில் செலுத்திய சாரதி

26 பங்குனி 2024 செவ்வாய் 11:31 | பார்வைகள் : 7254
சுவிட்சர்லாந்தில், நீளமான தொடர் பேருந்து ஒன்றை, தவறான இடத்தில் திருப்ப முயன்ற நிலையில் பள்ளத்தில் தொங்கிக் கொண்டிருந்த பயங்கர சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சுவிட்சர்லாந்தின் Lucerne மாகாணத்தில் தொடர் பேருந்து ஒன்றை செலுத்திக்கொண்டிருந்த சாரதி ஒருவர், திடீரென வழி மாறி, தவறான பாதையில் தான் பயணிப்பதை உணர்ந்துள்ளார்.
உடனே, பேருந்தை சரியான பாதைக்கு அவர் திருப்ப முயல, அந்த சாலை மிகவும் சிறிய சாலையாக இருந்ததால், அவரால் பேருந்தை திருப்ப முடியவில்லை.
பேருந்தின் பின்பகுதி பள்ளத்திற்கு மேல் தொங்கிக்கொண்டிருக்க, வேறு வழியில்லாமல் உதவி கோரி அழைத்துள்ளார்.
பின்னர்தான் தெரிந்தது, அந்த சாரதி போதையில் இருந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
உடனடியாக அவரது ஓட்டுநர் உரிமத்தைப் பறித்த பொலிசார், அவர் வாகனம் ஓட்ட தடையும் விதித்துள்ளார்கள்.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025