நடிகை டாப்சி ரகசிய திருமணம்..
25 பங்குனி 2024 திங்கள் 14:53 | பார்வைகள் : 11848
நடிகை டாப்சி கடந்த சில ஆண்டுகளாக டென்மார்க் நாட்டைச் சேர்ந்த பேட்மிண்டன் வீரர் மத்தியாஸ் போ என்பவரை காதலித்து வந்த நிலையில் கடந்த சனிக்கிழமை இருவருக்கும் உதய்பூரில் திருமணம் நடைபெற்றதாக தெரிகிறது. எந்தவித மீடியா வெளிச்சமும் இன்றி, அதிகாரப்பூர்வமாக அறிவிப்பும் இன்றி நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மத்தியில் இந்த திருமணம் நடந்ததாக தெரிகிறது
பாலிவுட் பிரமுகர் அனுராக் காஷ்யப் உட்பட ஒரு சில திரை உலக பிரபலங்கள் மட்டுமே இந்த திருமணத்தில் கலந்து கொண்டதாக தெரிகிறது. திருமண கொண்டாட்டங்களில் போது நடந்த சில புகைப்படங்கள் மட்டுமே வெளியாகி உள்ள நிலையில் டாப்சியின் திருமண புகைப்படம் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. டாப்சிக்கு திருமணம் நடந்தது இரண்டு நாட்களுக்கு பின்னர் தான் செய்தி வெளியாகியுள்ள நிலையில் அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan